இந்ததேசத்தின் வளர்ச்சியிலும்
வீழ்ச்சியிலும் எல்லா சமூகத்திற்கும் பங்கு உண்டு
ஆக
இந்த தேசத்தில் எல்லா சமூகமும் வளாச்சி அடைந்தால் தான்
இந்திய தேசம் தனது வல்லரசு கனவை பூர்திசெய்யமுடியும்.
இதைதான் நாம் தேசத்தின் முதல்பிரதம அமைச்சர் மேதகு ஜவகர்லால் நேரு அவர்கள்
இப்படிச்சொன்னார்கள்,
இந்த இந்திய தேசம் ஒரு பூங்ககவனத்திர்க்கு ஒப்பாகும்
அதாவது
பூங்கவனத்தை எப்படி
பல வடிவங்களில் உள்ள மலர்களும்,
பல வாசனையில் உள்ள மலர்களும்,
பல வர்ணங்களில் உள்ள மலர்களும்,
அலங்கரித்து அழகூட்டுமோ அதைப்போலவேதான் இந்த தேசத்தை
பல இன மக்களும்.
பல மொழி பேசக்கூடிய மக்களும்
பல மதங்களை பின்பற்றக்கூடிய மக்களும்
வேற்றுமையில் ஒற்றுமை என்கிற ரீதியிலே
இந்த தேசத்தை அலங்கரித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆகவே, இந்திய என்கிற தேசம் தொடர்ந்து ஆழகாக இருக்கவேண்டும் என்றால் பூங்கவனத்தில் உள்ள எல்லசெடிகளுக்கும் வித்தியாசம் பார்க்காமல் எவ்வாறு சூரிய ஒளியும் நீரும் பகிர்ந்து அளிக்கப்படவேண்டுமோ அதைப்போலவே
இந்த தேசத்தின் வளர்ச்சியில் மட்டுமல்லாமல் வாய்ப்புகளிலும் சமூகங்களின் மக்கள் தொகை சதவீதத்திற்கு தகுந்தார்ப்போல் உரிமைகள் பகிர்த்து அளிக்கப்பட வேண்டும் அப்போதுதான்
இந்திய தேசம் தனது வல்லரசு கனவை எட்ட முடியும்
.
தேசம் தனது இலக்கை அடையவேண்டுமானால் எல்லா சமுக மக்களும் இந்த தேசத்தில் சம உரிமையோடு சமமாக நடத்தப்பட வேண்டும்.
ஆனால்
இந்த தேசத்தில் என்ன நடக்கிறது?
முக்கிய சமூகங்களான முஸ்லிம், கிறிஸ்தவம்,தலித், ஆதிவசியினர்,பழங்குடிமக்கள் எல்லாரும் சமாக நடதப்படுகிரார்களா?
இல்லை. இல்லை.. இல்லவே... இல்லை
இந்தகருத்தை உறுதிசெய்யும் விதமாகத்தான் சமீபத்தில் வெளிவந்த அயோத்தியா தீர்ப்பும் இருக்கிறது
ஒரு தேசத்தின் நீதி மன்றம் நீதியை சொல்லாமல் மக்களின் வரிப்பணத்தை செலவு செய்து அநீதீயைசொல்லுகிறது
இந்த நாட்டின் அரசு கொடுத்திருக்கிற ஆவணங்களையும் உண்மையையும் ஆராயாமல் ஒரு நம்பிக்கையை ஆராய்கிறது மூன்று நீதிபதிகளைக்கொண்ட பென்ச்.
இப்படி ஒரு தீர்ப்பைசொல்ல 60 ஆண்டுகள் எதற்கு? என
கிராமங்களில் கட்டப்பஞ்சாயாத்து செய்பவர்கள் கூட இந்த தீர்ப்பை பார்த்து கேவலமாய் சிரிக்கிறார்கள்.
சட்டம் படித்த நீதி மான்கள் இன்றைக்கு இந்திய தேசத்தின் சட்டத்தையே உலகம் சந்தேக கண் கொண்டு பார்க்கிற அளவிற்கு கூண்டில் நிறுத்தி இருக்கிறார்கள்.
தேசத்தின் நலன் விரும்பும் நடுநிலையான இந்து சமூக சகோதரர்கள் கூட இந்த தீர்ப்பை பார்த்து திகைத்து மனம் குமுறுகிறார்கள்.
அதாவது உலகிலேயே முஸ்லிம்கள் அதிகம் வசிக்கக்கூடிய இரண்டாவது பெரிய நாடான இந்தியாவில் முஸ்லிம்கள் 450 ஆண்டுகாலமாக தொழுகை நடத்திவந்த பள்ளிவாசலை கடந்த டிச-6 2002 இல் ஒரு சில ஆயிரம் பேர் கூடி இடித்து தரைமட்டமாக்கினார்கள் அப்போது இந்திய உலக அரங்கில் தலைகுனித்து நின்றது
முஸ்லிம் சமூகம் இந்த அரசியல் வாதிகளின் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்தது
ஆனால்
முஸ்லிம் சமூகம் இந்த நீதி துறையின் மீது நம்பிக்கை வைத்து காத்து இருந்தது கடந்த செப்டம்பர்-30 ,2010 .அன்று அலாகாபாத் உயர் நீதி மன்றத்தின் லக்னோ கிளை வழங்கிய தீர்ப்போ நீதி மன்றாதின் நம்பக தன்மை குறித்தும் சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது.
இது ஒரு சிவில் வழக்கு, சிவில் வழக்கை பொறுத்தவரை சட்ட ஆவானங்கள் மற்றும் அனுபோக அடிப்படையில் தான் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் ஆனால் இந்த தீர்ப்போ Faith and belief என்கிற அடிப்படையிலேயே வழங்கப்பட்டுள்ளது
இது ஒரு சட்டத்திற்கும், வராலற்றுக்கும், உண்மைக்கு புறம்பான தீர்ப்பு.
அது மட்டுமல்ல இனிவரும் காலங்களின் இந்தியாவின் நீதி துறை இது போல நாம்பிக்கையின் அடிப்படையில் தான் தீர்ப்புகளை வழங்குமா? என்கிற அச்சமும் எழுந்துள்ளது.
இது நீதி துறையில் இது ஒரு தவறான முன் மாதரியும் கூட.
3000 பக்கங்களுக்கு மேற்ப்பட்ட இந்த தீர்ப்பில் ஒரு இடத்தில் கூட மஸ்ஜித் இடித்து தரைமட்ட மாக்கப்பட்ட கேவலமான செயலை சட்டத்திற்கு புறம்பான செயல் என எழுத அந்த நீதி மான்களுக்கு மனம் வரவில்லை
இது ஒரு title suite. இந்த வழக்கிற்கும் மஸ்ஜித் இடிக்கப்பட்டதற்கும் சம்பந்தம் இல்லை என்று வைத்துக்கொண்டாலும் கூட
இன்றைக்கு அந்த மஜீத் அந்த இடத்தில் இருந்து இருந்தால் இப்படி ஒரு தீர்ப்பை அந்த நீதி மான்கள் வழங்கி இருப்பார்களா?
நம்பிக்கை அடிப்படையி தீர்ப்பு எழுத எதற்கு அறுபது ஆண்டுகள்?
இதற்க்கு எதற்கு 3 நீதி பதிகளை கொண்ட ஒரு பென்ச்?
பாசிஸ்டுகள்
ஆதிகாலம் தொட்டே அதிகார வர்க்கமாக இருந்த பாசிஸ்டுகள் மக்களை பிரித்தாளும் கலையில் கை தேர்ந்தவர்கள் மக்களை பிரிதாளுவதர்க்காக அவர்கள் ஆரம்பித்து வைத்ததுதான் 400 ஆண்டுகாலம் முஸ்லிம்கள் தொழுகை நடாத்தி வந்த பள்ளி வாசலில் தான் இராமாயணம் என்னும் காவியத்தின் கதா நாயகன் இராமன் பிறாந்தான் என்னும் கற்பனையான நாம்பிக்கை.பின் அந்த அதிகாரவர்க்கதினார் நாடு சுதந்திரம் அடைந்த பின் தங்களின் அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள அரசியல் வேடம் போட்டுக்கொண்டனர்.
அவர்களின் ஒரு பிரிவுதான் பி ஜே பி.
1989.ஜூன் மாதம் ஹிமாச்சல்பிரதேசத்தில் நடந்த பி ஜே பி இன் National Executive Counsel மீட்டில் ஒரு தீர்மானம் கொண்டுவந்தது அதாவது "இது நாம்பிக்கையின் அடிப்படையில் இருப்பதால் இது போல ஒரு விசயத்தில் முடிவு செய்ய நீதி மன்றங்களுக்கு ஆதிகாரம இல்லை, பாபர் வந்தாரா?
அயோத்தியை ஆக்கிராமித்தாரா? கோவிலை இடித்துவிட்டு பள்ளிவாசல் கட்டினாரா? இது போன்ற விசயங்களில் தீர்ப்பு கொடுக்க நீதி மன்றத்திற்கு எந்த அதிகாரமும் கிடையாது என தீர்மானம் போடப்பட்டது
இதான் பிறகு என்ன சொன்னார்கள் இது நம்பிக்கையின் அடிப்படையில் இருப்பதால் முஸ்லிம்களோடு பேசி அந்த இடத்தை எங்களுக்கு பெற்று தரவேண்டும் இல்லையெனில் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றி அந்த இடத்தை எங்களுக்கு எடுத்து தரவேண்டும்
என்று அல்லவா பேசினார்கள் அந்த பாசிஸ்டுகள்.
அவர்களுடையா அதே தீர்மானத்தை தானே இந்த தீர்ப்பும் பிரதிபலிக்கிறது
நாடு சுதந்திராம் அடைவதற்கு முன்பு 1885 .இதே போலதான் மகிந்த ரகுபர் தாஸ் என்பவர் கோவில் கட்டப்போனார் ஆனால் அப்போதைய Deputy Commissioner அவரை கோவில் கட்டவிடவில்லை பின் அவர் Secretaray Of India வை எதிர்த்து இதே போல் ஒரு Title sute வழக்கு போட்டார் அப்போது அவராது வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது நீதிபதிகள் Maintain Status role என்று தான் தீர்ப்பு அளித்தார்.
அதோடு 1885 -இல் இருந்து 1949 .டிச-23 -ம் தேதிவரை இந்த பாசிஸ்டுகள் சும்மா தானே இருந்தார்கள்.
பின் 1949 டிச-23 -ம் இரவில் தானே ராமன், சீதை விக்கிராகங்க்களை முஸ்லிம் களின் பள்ளிவாசலுக்கு வைதுவிட்டுப்போனார்கள்.
இந்த வரலாற்றைஎல்லாம் சட்டம் படித்த அதி மேதாவிகள் மறந்துவிட்டார்களா?
தொல்லியல் ஆய்வுகள்.
இந்த வழக்கைப்பொருத்தவரை ARCHAEOLOGICAL SURVEY OF INDIA (A S I ) எனும் இந்திய தொல்லியல் கழகம் நடத்திய எல்லா ஆராய்ச்சி களிலுமே ராமர் கோவில் இருந்ததற்க்கான ஆதாரமோ அல்லது கோவிலை இடித்துவிட்டுதான் மஸ்ஜித் கட்டப்பட்டது என்பதற்கான ஆதாரமோ கிடைக்க பெறவில்லை.
மஸ்ஜித் இருந்த இடத்தில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வில் சுண்ணாம்பு தூண்களும் வெட்டப்பட்டா மிருக எலும்புகலுமே கிடைத்தன. சுண்ணாம்பை உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தது முஸ்லிம்கள் தான்.
சுண்ணாம்பும், வெட்டப்பட்ட மிருக எலும்புகளும் பாப்ரி மஸ்ஜித் இருந்த இடத்தில் கண்டு எடுக்கப்பட்டிருப்பதன் மூலம் இந்த இடத்தில் முஸ்லிம்கள் தான் வாழ்ந்தார்கள் என தெளிவாக உறுதி செய்தார்கள் தொல்லியல் துறையினர்.
அத்தோடு 2003. தொல்லியல் கழக அறிக்கை அறுதியிட்டு இறுதியாக மசூதி இருந்த இடத்தில் தான் முன்னர் கோவில் இருந்தது என கூற முடியவில்லை
ஆய்வு முடிவுகளையும் சட்டத்தையும் விட்டு விட்டு நபிக்கையின் அடிப்படையில் சட்ட முடிவுகளை எடுக்க முடியுமா?
என சட்ட வல்லுனர்களெல்லாம் திகைத்து நிற்கிறார்கள். இந்த மா மேதைகளின் தீர்ப்பை கண்டு.
வழக்கு தள்ளுபடி ஆனால் பங்கு....?
தங்களுக்கு சொந்தமான 2 .77 ஏக்கர் தங்களிடம் ஒப்படைக்கசொல்லி தானே சுன்னி வக்பு வாரியம் வழக்கு தொடுத்தது வாழக்கை தள்ளுபடி செய்த நீதி பதிகள் பின்பு எதற்கு மூன்றில் ஒரு பங்கு சுன்னி வக்பு வாரியத்திற்கு என தீர்ப்பு சொல்லுகிறார்கள்.
இந்த தீர்ப்புத்தான் சட்டத்துறையில் இந்த நூற்றாண்டில் நடந்த மாபெரும் தமாசாக இருக்கிறது.
இரவு பகலாக சிரமப்பட்டு இந்த தீர்ப்பை எழுதியதாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் நீதிபத்திகளுக்கு கடந்த கால வரலாறும், நிகழ கால வரலாறும் தெரியாமல் போனது ஏனோ?
அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு
எந்த ஒரு வரலாற்றுப்பார்வையும் இன்றி, ஆதாரங்களின் அடிப்படை இன்றி, வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கியிருக்கும் இந்த கேவலமான தீர்ப்பை மத்தியில் உள்ள காங்கிரஸ் கட்சி வரேவேற்றுள்ளது.
நாம் தமிழ் நாட்டில் எல்லாவற்றிலும் எதிரும் புதிருமாக இருக்கும் அ இ அ தி மு க வும், திராவிட முன்னேற்ற கழகமும் கூட ஒரே அணியில் நின்று வாய் மூடி ஆதரவை தெரிவித்து நமக்கு துரோகம் செய்வதை தமிழ் முஸ்லிம்கள் உணரவேண்டும்.
முஸ்லிம் சமூகம் உணர்ந்து செய்யவேண்டியது
பாப்ரி மஸ்ஜிதும் அது சார்ந்த இடமும் வரலாற்று பூர்வமாகவும் ஆதார பூர்வமாகவும் முஸ்லிம்களுடையது தான்
முஸ்லிம்களோ
அரசை நம்புகிறார்கள் ஆனால் ஆட்சியில் இருக்ககூடிய கட்சிகள் எல்லாமே முஸ்லிகளுக்கு துரோகம் செய்கின்றன இந்த மகா பாதகமான தீர்ப்பு முஸ்லிம் களுக்கு சொல்லி தருவது எல்லாம் அராசு பதிவிகளில் முஸ்லிம்கள் அமர்ந்திட முயற்சிகள் செய்திட வேண்டும்
இப்படி ஒரு அநீதி நடக்கின்ற போது இந்த அநீதியை மக்கள் மன்றத்திற்கு எடுத்துசெல்லும் ஊடக துறையில் முஸ்லிம்கள் காலூன்றவேண்டும்
இது மாதரியான தவறுகளை நீதிமன்றம் செய்கின்ற போது அதை அதே சட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்தக்கூடிய சட்டம் இயற்றும் சபையான பாராளுமன்றத்தில் முஸ்லிம்கள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்திட வேண்டும் இதற்க்கு பல்வேறு காட்சிகளில் இருக்கக்கூடிய முஸ்லிம்கள் எல்லாம் ஒரே அரசியல் குடையின் கீழ் வரவேண்டும்
தேசிய அளவில் முஸ்லிம்கள் ஒரே அரசியால் கட்சியின் கீழ் வரவேண்டும்.
முஸ்லிம்கள் எந்த அரசியல் அன்னக்காவடிகளையும் நம்பாமல் தங்களை தாங்களே பலப்படுத்திக்கொண்டு இதுபோன்ற அநீதிகளை எதிர்த்துப்போராட முன் வரவேண்டும்
இல்லை எனில் எதிகாலத்தில் இது போன்ற அநீதிகள் மூலம் உங்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்திட காவி சக்திகள் பல முயற்சிகளை மேற்கொள்ளும் என்பதயும் இந்திய முஸ்லிம் சமூகம் உணரவேண்டும்.
No comments:
Post a Comment