வாழ்த்துவது
வழக்கமில்லை
ஆதாலால்
பிராத்திக்கிறேன்
எம் இறைவனிடம்
எம்மோடும்
எம் நாட்டோடும்
எம் மக்களோடும்
நெடுந்ததூரம் பயணித்து
நிலைமாறும் இவுலாகில்
நிலைத்த நேர்வழியில்
வாழ்ந்து மரணிக்க
நெஞ்சுருகி நான்
பிராத்திக்கிறேன்
நிலையான இறைவனிடம்
சகோதரியே
வாழ்த்துவது
வழக்கமில்லை
ஆதாலால்
பிராத்திக்கிறேன்
எம் இறைவனிடம்
ஜின்னையும் மனிதனையும்
இவ்வுலாகில் படைத்தது
இறைவனை வணங்கிடவே-ஏக
இறைவனை வணங்கிடவே
ஆதலால்...
வணக்கம் பேணு
வாழ்வினில் வணக்கம் பேணு
சகோதரியே
ஆகுமாகியதை புசித்து
அல்லாஹ்
தடுத்ததை விடுத்து
சுவனம்மஒன்றே நோக்காய்
சுறுசுறுவெனவே பயனிப்பாய்
உம்
இம்மை மறுமை
வாழ்விராண்டும்
இலகுவாய்
வெற்றிக்கொடேட்ட
நெஞ்சுருகி பிராத்திக்கிறேன்
நம்மை நோக்கோடு
படைத்த இறைவனிடம்
வாழ்த்துவது
வழக்கமில்லை
ஆதாலால்
பிராத்திக்கிறேன்
எம் இறைவனிடம்
சகோதரியே
கடமையில் நன்மகளாய்
நல்லதொரு இல்லாளாய்
அரவணைக்கும் அம்மாவை
அன்பொழுகும் தோழியாய்
வாழ்க்கையை பேணு
வசந்தத்தை காணு.
இராண்டிலுமே
வெற்றி பெற்ற
நல்லடியாளால்
சொர்க்கம் புகுந்து
களிப்புடானே
நீ
அழகிய பறவையின்
வடிவமதில்
சுற்றிதிரிந்திட வேண்டுமென
நாமை படைத்த இறைவனிடம்
நானே உனக்காய் பிராத்திக்கிறேன்
No comments:
Post a Comment