Sunday, December 26, 2010

ஹிந்துத்துவமும், சியோனிஷமும் - ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்

 

நன்றி:


 

Sunday, December 19, 2010

கஷ்மீர்: இந்தியா பாகிஸ்தான் இரண்டு நாடுகளாலும் கரைபடுதப்படும் தேசம்

நாடு பிடிக்கும் இரண்டு தேசங்களால் வஞ்சிக்கப்பட்டு நசுக்கப்படும் காஷ்மீர் மக்களில் அவலம் எப்போது நீங்குமோ..?

என ஏக்கத்தோடு நான் படித்த இந்த விடயங்களை அப்படியே நண்பர்கள் அனைவரோடும் பகிர்ந்துகொள்கிறேன்

ஜம்மு காஷ்மீரின் நிலப்பரப்பு 86 ,000௦௦௦(எண்பத்து ஆறு ஆயிராம் சதுர மைல்கள்.

மக்கள் தொகை கணக்கின்படி  காஷ்மீரில் ஏறாத்தாலே 10 மில்லியன் பேர் வசிக்கின்றார்கள்.

காஷ்மீரை மூன்று பிராந்தியங்களாக பிரிக்காலாம்.

1) காஷ்மீர் பள்ளத்தாக்கு

2) ஜம்மு பிராந்தியம் (கில்ஜிட்,லடாக், அடங்கிய வடக்குபிராந்தியம்)

3 ) இயற்கை எழில் கொண்ட காஷ்மீர் பள்ளதாக்கில் சரித்திரதொன்மை கொண்ட ஸ்ரீநகர் அமைந்துள்ளது இந்நகரின் மையப்பகுதி ஏனய இரு பிராந்தியங்களின் நடுவே அமைந்துள்ளது.

வராலற்றுப்பின்னணி

காஷ்மீரின் சோதனைக்காலம்,

1819 -ல் முஸ்லிம் ஆட்சி முடிவுற்று சீக்கியர்களின் ஆட்சி தொடங்கிய போதே
ஆரம்ம்பித்துவிட்டது.வெள்ளையரின் கிழக்கிந்திய கம்பெனியினர் போர்ப்பினையாக காஷ்மீரை,சீக்கியர்களின் இராணுவ தளபதியான குலாப் சிங்கிடம்மிருந்து 7 .5 மில்லியன் ரூபாய்க்கு (சுமார் 300 000 டாலர்கள்) அமிர்தசரஸ் ஒப்பந்தத்தின்படி 1846 -ல் வாங்கும்போது காஷ்மீரின் நாட்கள் இன்னும் இருண்டவைகளாக மாறிவிட்டன.

ஒப்பந்தம் என்ற மட்டும்மளவில் இல்லாமல் ,விற்பனை பத்திரம் என்றும் அமிர்தசரஸ் உடன்படிக்கை வரையறுக்கப்பட்டது.

இதன் காரணமாக நிராதரவான காஷ்மீரிகள் நிலம்,பயிர்கள்,ஓடைகள் மற்றும் இன்ன பிறவற்றுடன் சேர்த்தே விற்கப்பட்டனர்.(எவ்வளவு மலிவான விற்பனை இது? பவம் காஷ்மீரிகள்)
1846 ஐ அடுத்து நூறு வருடங்களாக காஷ்மீரிகள்,முக்கியமாக முஸ்லிம்கள் ஆயிரகானக்கில் கொல்லப்படுகின்றனர்.பெருந்துயரமாக அவரிகளின் மத உரிமைகள் மறுக்கப்பட்டு,அவர்கள் மீது கடுமையான வரிகள் (taxes ) சுமத்தப்பட்டன.

மகாராஜா ஹரிசிங் சொந்த குடிமக்கள் மீதே வன்முறையை கட்டவிழ்த்துவிட்டார்.
பின்னர் 1930 -ல் காஷ்மீர் குடிமக்கள் எதிர்க்க ஆராம்பித்துவிட்டனர்.இது ஒட்டுமொத்தமான மக்கள் எழுச்சியாகும்
அடக்குமுறை போருக்க முடியாமல் 1931 -ல் ஷேக்அப்துல்லாவின் (இன்றைய காஷ்மீர் முதல் அமைச்சர் உமர் அப்துல்லாவின் பாட்டனார்)தலைமையில் மக்கள் எழுந்தனர்.

அதே கால கட்டத்தில் இந்தியாவில் காந்தி தலைமையிலும் விடுதலைக்கான போராட்டங்கள் நாடைபெற்றுக்கொண்டு இருந்தன ஒரே வித்தியாசம் இங்கே வெள்ளையனே வெளியேறு என்கிற கோஷமும் அங்கே காஷ்மீரை விட்டு வெளியேறு கோஷமும் மேலோங்கி இருந்தது.

1947 -ல் இந்தியாவும் பாகிஸ்தானும் தனித்தனியாக பிரிந்து கஷ்மீரைப்பார்த்து, "நீ யாருடன் வருவாய்? "என்கிற ரீதியில் கேட்டானர்

 மகராஜா ஹரிசிங் அவர்களோ நான் யாருடனும் இல்லை என ஜகா வாங்கி காஷ்மீரை தொடர்ந்து தனி நாடாகவே நடத்தினார் திடீரென 1947 அக்டோபர் 22 -ல் பாகிஸ்தான் இராணுவத்தின் North West Frontier Province என்கிற ராணுவதுருப்பு பஷ்தூன் ஆப்கானி என்கிற பழங்குடியினருடன் சேர்ந்து காஷ்மீர் மீது படை எடுத்தது.

இந்த திடீர் படையெடுப்பை கண்டு அதிர்ச்சி அடைந்த மகராஜா உடனடியாக உதவிக்குவரவும் என அப்போதைய இந்தியா பிரதமர் நேருவுக்கு தகவல் அனுப்பினார்.
காஷ்மீர் வரலாற்றின் நெருக்கடிமிக்க நிகழ்வுகள்

25 .10 .1947
கடைசி ஹிந்து டோக்கர ஆட்சியாளரான மகாராஜா ஹரிசிங் ஸ்ரீநகரை விட்டு ஓடிவிடுகிறார்
26 .10.1947
ஓடிப்போகும் மன்னரிடம் இந்தியா பிரதிநிதி வி.பி.மேனன் ஜம்முவில் வைத்து 'இணைப்பு பத்திரம்' என்றழைக்கப்பட்ட தஸ்தாவேஜில் கைஎளுத்துப்பெருகிறார்.
27 .10 .1947
மகாராஜாவின் வேன்றுகோளை ஏற்று உடனடியாக இந்தியா ராணுவம் காஷ்மீருக்கு போக நேரு உத்தரவு இட்டார் அங்கே இரு படைகளுக்கும் உக்கிரகமாக போர் நடைப்பெற்றது பஞ்சாயத்துக்கு ஐ நா சபை வந்தாது இரு பாடியக்களும் போர் நிறுத்த ஒப்பந்தாம் செய்ததன
01 01 1948 .
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஐ நா வில் புகார் செய்தது
15 01 1948 .
பாகிஸ்தானும் பதில் கூறுகிறது 9 மதாங்கள் இது குறித்து நீண்ட விவாதங்கள் நடத்தப்படுகின்றன

13 .08 .1948 -15 .01 .1949

ஐ நா வின் பாதுகாப்பு கவுன்சில் பகைமைகளை முடிவுக்கு கொண்டு வருமாறும் அதன் பின் இனைப்புக்குறித்து

 சுதந்திரமான,நியாயமான,சுயநிர்ணயகருத்து கணிப்பு (plebiscite )நடத்தப்பெற்று அதனடிப்படியில் இணைப்புபற்றி முடிவெடுக்கவேண்டும் என இரு தீர்மானங்களை நிறைவேற்றியது. அதாவது "காஷ்மீர் யாருடன் ?"என்று முடிவுசெய்யும் அதிகாரத்தை காஷ்மீர் மக்களுக்கே ஐ நா வழங்கியது.

இந்த ஒப்பந்தத்தின் இறுதி வரியை கண்டுகொள்ளாத பாகிஸ்தான் தான் வசம் வந்த காஷ்மீரின் ஒரு பகுதியை தான் நிர்வாகத்தில் சேர்த்துக்கொண்டு அதற்க்கு "ஆஷாத் காஷ்மீர்' என்று பெயர் சூட்டியது


தனக்கு கிடைத்த பகுதியை இன்று வரையில் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டது இந்தியா அரசாங்கம்.

நடுவில் இருதலைக்கொள்ளியாக இன்று வரை தவித்துக்கொண்டு இருப்பவர்கள்தான் பரிதாபத்திற்குரிய அந்த கஷ்மீர் அப்பாவி மக்கள்.

நன்றி: விடியல் வெள்ளி மாத இதழ் 11 .09 .2010

Monday, November 29, 2010

விடியலைத்தேடி: புகை நாமக்கு பகை

விடியலைத்தேடி: புகை நாமக்கு பகை

புகை நாமக்கு பகை

இந்த உலகத்தில் கோடான கோடி படைப்பினங்களை படைக்கப்பட்டிருக்கின்றன  அது எல்லாமே மனித இனத்தின்  பயன்பாட்டிற்க்காகதான். 

மனிதனும் எல்லாவற்றையும்  பயன்படுத்தி  அதன் பயனை அடைந்துகொண்டுதான் இருக்கிறான்

நல்லவையும் தீயவையும் மனிதனின் கைகளிலேயே ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது  
 
அதில் எது நல்லது, எது தீயது என தேர்ந்தெடுக்கும் உரிமையும் அதற்கான அறிவும் நமக்கு வழங்கப்பட்டிருகிறது
அதைதான் அறிவியல் உலகம் பகுத்தறிவு என்கிறது சரி இந்த பகுத்தறிவை மனித இனம் சரியாக பயன்படுதுகிறதா? என ஒரு வினா எழுப்புவோமேயானால் ஆம் சரியாகத்தான் பயன் படுத்துகிறோம் என்றுதான் பதில் வரும்,
 
ஆனால் இந்த பகுத்தறிவுக்கு  ஒவ்வாத  பல செயல்களை நாம் செய்துகொண்டே தான் இந்த பதிலை தருகிறோம், உதாரணமாக  
 
மனித இனத்தை மதி இழக்க செய்யும் வெறியேறிய காமம், குரோதம், பணபித்து, பதவிமோகம், போதை, போன்றவற்றை சொல்லலாம் இதில் நான் கூறிய எல்லாமே மனித இனத்திற்கு ஆபத்தானதுதான் 
இதில் நான் இறுதியாக  சொன்ன போதை என்பது எல்லா   தவறுகளுக்கும்  முதன்மையானது என்பது  நாம் பகுத்தறிவுக்கு தெரிந்தும் 
நாம் போதைக்கு அடிமை ஆகிறோம் என்பதுதான் வேதனையான விடயம்.
 
போதையில் எத்தனையோ வகை இருந்தாலும் மக்கள் மத்தியில் மிகவும் அமைதியாக பெரும் இழப்பை ஏற்ப்படுத்துவது லட்சக்கணக்கான உயிர்கள் பாதிக்கப்படுவதும் மரணம் அடைவதும்  புகைப்பிடிக்கும் பழக்கத்தாலேயே
 
இதனால் தான் இதயம்  சம்மந்த பட்ட நோய்களும் புற்றுநோயும் அதிகம் ஏற்ப்படுவதாக மருத்துவர்கள் நமக்குசொல்கிறார்கள்.
 
இந்த விடயத்தில் நாமும் கெட்டு  பிறரையும் கெடுக்கிறோம் இதோ சமீபதில் வெளியான ஒரு ஆய்வு ஒன்றை படிதுப்பாருங்கள்
 
 
 2004-ம் ஆண்டு முதல் 192 நாடுகளில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. சிகரெட் புகைக்காமல் அடுத்தவர் பிடித்த சிகரெட் புகையால் பாதிக்கப்பட்டு ஆண்டுதோறும் சுமார் 6 லட்சம் பேர் பலியாகி வருவது தெரிய வந்துள்ளது. அவர்களில் 40 சதவீதம் பேர் குழந்தைகள் மற்றும் 30 சதவீதம் ஆண், பெண் அடங்குவர். மேலும், இதயநோயினால் 3 லட்சத்து 79 பேரும், 1 லட்சத்து 65 பேர் மூச்சு கோளாறு சம்பந்தப்பட்ட நோயினாலும், 36 ஆயிரத்து 900 பேர் ஆஸ்துமாவினாலும், 21 ஆயிரத்து 400 பேர் நுரை யீரல் புற்று நோயினாலும் ஆண்டுதோறும் மடிகின்றனர்.
 
இவ்வாறு இறப்பவர்களில் இது உலக அளவில் 1 சதவீதம் என கணக்கிடப்பட்டுள்ளது. சுவீடன் தேசிய சுகாதார நலக்கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. மேலும், குழந்தைகள் இருக்கும் போதே பெரும்பாலான பெற்றோர் சிகரெட் பிடிக்கிறார்கள். அந்த புகை குழந்தையை பெருமளவில் பாதிக்கிறது. அது அவர்களை சாவை நோக்கி அழைத்து செல்கிறது. காதுகளில் நோய் பரவுதல், ஆஸ்துமா, நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் அவர்களை அதிரடியாக பற்றிக் கொள்கின்றன. எனவே, குழந்தைகளை வைத்துக்கொண்டு பெற்றோர் சிகரெட் பிடிக்கக்கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.       (நன்றி தமிழ் சி என் என்.கம்)      
 
இது ஒருபுறம் இருக்க 
நாம் நமை எவ்வாறு பாழ்படுதிக்கொள்கிறோம்   என்பதயும் பார்ப்போம்
நாம் இந்த பூமியில் உயிர் வாழ சுவாசிப்புதிறன்  மிக முக்கியம் அப்போதுதான் நாம் ஆக்சிஜனை சுவாசித்து கார்ப்பண்டை ஆக்சைடை வெளியேற்றமுடியும் இதற்க்கு முக்கிய பங்கு வகிப்பது நம்முடைய சுவாசமண்டலம்
 
சுவாசமண்டலம்
 
சுவாசமண்டலம் என்பது மூச்சுக்குழல்,நூரையீரல்,காற்றுணுண்ணறைகள்,மூச்சுத்துளை சிறுகுழல்கள் இணைந்தது சுவாச மண்டலம் இனி  எவ்வாறு சுவாசம் நடைபெருகிறது என்பதை பார்ப்போம்
 
உத்திரவிதானம் எனும் உறுப்பு சுருங்கி விரியும்போது சுவாசம் நடைபெறுகிறது
உத்திரவிதானம் சுருங்கும்போது ஆக்சிஜன் உள்ளிளுக்கப்படுகிறது அது விரிவடையும்போது உள்ளே உள்ள கார்பன்டை ஆக்சைடு வெளி ஏற்றப்படுகிறது 
 
நான் மேலே சொன்ன நுரையீரல் என்ற உறுப்பில் 30ஆயிரம் சிறு மூசுக்குழல்கள் உள்ளன 
600  மில்லியன் காற்று நுண்ணறைகள்  உள்ளன  
 
நுரையீரல் வலது  இடது என இரண்டுவகையாக பார்க்கப்படுகிறது இதில் வலது பகுதி நுரையீரல் 620 .கிராம் எதையும் இடது நுரையீரல் 560 ,கிராம் எதையும் உள்ளது 
இந்த நுரையீரலுக்கென தனியாக தசைகள் ஏதும் இல்லை மார்பில் உள்ள தசைகளே நுரையீரலை இயக்குகின்றன 
 
சுவாசம் நடைபெறும்போது  உள்ளே சென்று வெளியே வரும் காற்றின் அளவை கணக்கிட   மருத்துவ உலகம் இஸ்பைரோ  மீட்டார் எனும் கருவியை பயன்படுத்துகிறார்கள்
 
ஒரு ஒரு சுவாசத்தின் போதும் 1 /2  (அரை)  லிட்டர் காற்று உள்ளே போகிறது
 
நுரையீரல் முழுமையாக காற்றை இழுத்தால் தான் உடலில் அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்சிஜன் செல்லும்.
 
நுரையீரல் தான் கடமையை செய்வதை நாம் புகைப்பிடிப்பதன் மூலம் தடுக்கிறோம்
 
 
நுரையீரல் பாதிப்பால் ஆஸ்துமா, சுவாச ஒவ்வாமை, நுரையீரல் உயர் ரத்த அழுத்த நோய், நுரையீரல் அடைப்பு நோய், புற்றுநோய் ஏற்படும். புகை பிடித்தலால்  நோய் எதிர்ப்பு குறைவு, ஒவ்வாமை ஆகிய நோய்களுக்கு நாமே  காரணம் ஆகிறோம்

ஒன்றை மாட்டும் நாம் மறந்துவிடக்கூடாது நீர், உணவு, இல்லாமல் கூட சிலநாட்கள் உயிர் வாழலாம் ஆனால் மூச்சுக்காற்று இல்லாமல் மனிதனால் 3  நிமிடங்களுக்கு மேல்  உயிர் வாழ முடியாது 


ஆக 

 ஆதலால் புகையே  நாமக்கு பகை என்பதை மனதில் கொண்டு
  
புகைப்பழக்கம் இல்லாதோர் இனி வாழ்வில் இந்த பழக்கத்திற்கு இடமே இல்லை என சபதம் ஏற்ப்போம்

புகைப்பழக்கம் இருப்போர் இதை விட்டொழிக்க சபதம் ஏற்கலாமே.....
 
 
 சிகிரட்டின் நுனியில் எரியும் சிகப்பு நெருப்பு என்பது நாம்  நோய் எனும் எமனுக்கு காட்டும் கலங்கரை விளக்கு போல் ஆகிவிடுகிறது

Monday, November 22, 2010

சகோதரி மல்லிக்கா பிறந்தநாளைக்கு என்னுடைய பிராத்தனை 2010

வாழ்த்துவது
வழக்கமில்லை
ஆதாலால்
பிராத்திக்கிறேன் 
எம் இறைவனிடம்

எம்மோடும்
எம் நாட்டோடும்
எம் மக்களோடும்
நெடுந்ததூரம் பயணித்து
நிலைமாறும் இவுலாகில்
நிலைத்த நேர்வழியில்
வாழ்ந்து மரணிக்க 
நெஞ்சுருகி நான்
பிராத்திக்கிறேன்
நிலையான இறைவனிடம்  


சகோதரியே 
வாழ்த்துவது
வழக்கமில்லை
ஆதாலால்
பிராத்திக்கிறேன் 
எம் இறைவனிடம்

ஜின்னையும் மனிதனையும்
இவ்வுலாகில் படைத்தது
இறைவனை வணங்கிடவே-ஏக
இறைவனை வணங்கிடவே
ஆதலால்...
 வணக்கம் பேணு
வாழ்வினில் வணக்கம் பேணு


சகோதரியே 
ஆகுமாகியதை  புசித்து
அல்லாஹ்
தடுத்ததை விடுத்து
சுவனம்மஒன்றே  நோக்காய்
சுறுசுறுவெனவே பயனிப்பாய்
உம்
இம்மை மறுமை
வாழ்விராண்டும் 
இலகுவாய்
வெற்றிக்கொடேட்ட
நெஞ்சுருகி பிராத்திக்கிறேன்
நம்மை நோக்கோடு
படைத்த இறைவனிடம்

வாழ்த்துவது
வழக்கமில்லை
ஆதாலால்
பிராத்திக்கிறேன் 
எம் இறைவனிடம்
சகோதரியே 
கடமையில் நன்மகளாய்
நல்லதொரு இல்லாளாய்
அரவணைக்கும் அம்மாவை
அன்பொழுகும்  தோழியாய்
வாழ்க்கையை பேணு
வசந்தத்தை காணு.

இம்மை மறுமை
இராண்டிலுமே
வெற்றி பெற்ற
நல்லடியாளால்
சொர்க்கம் புகுந்து
களிப்புடானே
நீ  
அழகிய பறவையின்
வடிவமதில்
சுற்றிதிரிந்திட வேண்டுமென
நாமை படைத்த இறைவனிடம்
நானே உனக்காய் பிராத்திக்கிறேன்

Sunday, November 21, 2010

பாப்ரி மஸ்ஜித்: ஊகத்தின் அடிப்படையில் கொலை செய்யப்பட்ட நீதி!

இந்ததேசத்தின் வளர்ச்சியிலும் 
வீழ்ச்சியிலும் எல்லா சமூகத்திற்கும் பங்கு உண்டு 
ஆக
 இந்த தேசத்தில் எல்லா சமூகமும் வளாச்சி அடைந்தால் தான் 
இந்திய தேசம் தனது  வல்லரசு கனவை பூர்திசெய்யமுடியும்.

இதைதான் நாம் தேசத்தின் முதல்பிரதம அமைச்சர் மேதகு ஜவகர்லால் நேரு அவர்கள் 
இப்படிச்சொன்னார்கள்,

இந்த இந்திய தேசம் ஒரு பூங்ககவனத்திர்க்கு ஒப்பாகும் 
அதாவது

 பூங்கவனத்தை எப்படி 
பல வடிவங்களில் உள்ள மலர்களும்,
பல வாசனையில் உள்ள மலர்களும்,
பல வர்ணங்களில் உள்ள மலர்களும்,
அலங்கரித்து அழகூட்டுமோ அதைப்போலவேதான் இந்த தேசத்தை 
பல இன மக்களும்.
பல மொழி பேசக்கூடிய மக்களும் 
பல மதங்களை பின்பற்றக்கூடிய மக்களும் 
வேற்றுமையில் ஒற்றுமை என்கிற ரீதியிலே 
இந்த தேசத்தை அலங்கரித்துக்கொண்டு இருக்கிறார்கள். 

ஆகவே,  இந்திய என்கிற தேசம் தொடர்ந்து ஆழகாக இருக்கவேண்டும் என்றால் பூங்கவனத்தில் உள்ள எல்லசெடிகளுக்கும் வித்தியாசம் பார்க்காமல் எவ்வாறு சூரிய ஒளியும் நீரும் பகிர்ந்து அளிக்கப்படவேண்டுமோ  அதைப்போலவே
இந்த தேசத்தின் வளர்ச்சியில் மட்டுமல்லாமல்  வாய்ப்புகளிலும் சமூகங்களின்  மக்கள் தொகை சதவீதத்திற்கு தகுந்தார்ப்போல் உரிமைகள் பகிர்த்து அளிக்கப்பட வேண்டும்  அப்போதுதான்
இந்திய தேசம் தனது வல்லரசு கனவை  எட்ட முடியும்
.
தேசம் தனது இலக்கை அடையவேண்டுமானால்  எல்லா சமுக மக்களும் இந்த தேசத்தில் சம உரிமையோடு சமமாக நடத்தப்பட வேண்டும்

ஆனால்

இந்த தேசத்தில் என்ன நடக்கிறது

முக்கிய சமூகங்களான முஸ்லிம், கிறிஸ்தவம்,தலித், ஆதிவசியினர்,பழங்குடிமக்கள் எல்லாரும் சமாக நடதப்படுகிரார்களா?

இல்லை. இல்லை.. இல்லவே... இல்லை

இந்தகருத்தை உறுதிசெய்யும் விதமாகத்தான் சமீபத்தில்  வெளிவந்த அயோத்தியா தீர்ப்பும் இருக்கிறது
ஒரு தேசத்தின் நீதி மன்றம் நீதியை சொல்லாமல் மக்களின் வரிப்பணத்தை செலவு செய்து அநீதீயைசொல்லுகிறது

இந்த நாட்டின் அரசு கொடுத்திருக்கிற ஆவணங்களையும் உண்மையையும் ஆராயாமல் ஒரு நம்பிக்கையை ஆராய்கிறது மூன்று நீதிபதிகளைக்கொண்ட பென்ச்.

இப்படி ஒரு தீர்ப்பைசொல்ல  60 ஆண்டுகள் எதற்குஎன
கிராமங்களில் கட்டப்பஞ்சாயாத்து   செய்பவர்கள் கூட இந்த தீர்ப்பை பார்த்து கேவலமாய் சிரிக்கிறார்கள்.

சட்டம் படித்த  நீதி மான்கள்   இன்றைக்கு இந்திய தேசத்தின் சட்டத்தையே உலகம் சந்தேக கண் கொண்டு பார்க்கிற அளவிற்கு கூண்டில் நிறுத்தி இருக்கிறார்கள்.

 தேசத்தின் நலன் விரும்பும் நடுநிலையான இந்து சமூக சகோதரர்கள் கூட இந்த தீர்ப்பை பார்த்து திகைத்து மனம் குமுறுகிறார்கள்.

அதாவது உலகிலேயே முஸ்லிம்கள் அதிகம் வசிக்கக்கூடிய இரண்டாவது பெரிய நாடான இந்தியாவில் முஸ்லிம்கள் 450 ஆண்டுகாலமாக தொழுகை நடத்திவந்த பள்ளிவாசலை  கடந்த டிச-6 2002 இல் ஒரு சில ஆயிரம் பேர் கூடி இடித்து தரைமட்டமாக்கினார்கள் அப்போது இந்திய உலக அரங்கில் தலைகுனித்து நின்றது  
முஸ்லிம் சமூகம் இந்த அரசியல் வாதிகளின் மீது வைத்திருந்த நம்பிக்கையை  இழந்தது

ஆனால்

முஸ்லிம் சமூகம் இந்த நீதி துறையின் மீது நம்பிக்கை வைத்து காத்து இருந்தது கடந்த செப்டம்பர்-30 ,2010 .அன்று அலாகாபாத் உயர் நீதி மன்றத்தின் லக்னோ கிளை வழங்கிய   தீர்ப்போ நீதி மன்றாதின்  நம்பக தன்மை குறித்தும்  சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது.

இது ஒரு சிவில் வழக்குசிவில் வழக்கை பொறுத்தவரை சட்ட ஆவானங்கள் மற்றும் அனுபோக அடிப்படையில் தான் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் ஆனால் இந்த தீர்ப்போ Faith and   belief   என்கிற அடிப்படையிலேயே வழங்கப்பட்டுள்ளது 

இது ஒரு சட்டத்திற்கும்,  வராலற்றுக்கும்உண்மைக்கு புறம்பான தீர்ப்பு

அது மட்டுமல்ல இனிவரும் காலங்களின் இந்தியாவின் நீதி துறை இது போல நாம்பிக்கையின் அடிப்படையில் தான் தீர்ப்புகளை வழங்குமா? என்கிற  அச்சமும் எழுந்துள்ளது

இது நீதி துறையில்  இது ஒரு தவறான முன் மாதரியும்  கூட.


3000 பக்கங்களுக்கு மேற்ப்பட்ட இந்த தீர்ப்பில் ஒரு இடத்தில் கூட மஸ்ஜித் இடித்து தரைமட்ட மாக்கப்பட்ட கேவலமான செயலை சட்டத்திற்கு புறம்பான செயல் என எழுத  அந்த நீதி மான்களுக்கு மனம் வரவில்லை

இது ஒரு title  suite. இந்த வழக்கிற்கும் மஸ்ஜித் இடிக்கப்பட்டதற்கும் சம்பந்தம் இல்லை என்று வைத்துக்கொண்டாலும் கூட 

இன்றைக்கு அந்த மஜீத் அந்த இடத்தில் இருந்து இருந்தால் இப்படி ஒரு தீர்ப்பை அந்த நீதி மான்கள் வழங்கி இருப்பார்களா?   

நம்பிக்கை  அடிப்படையி தீர்ப்பு எழுத எதற்கு அறுபது ஆண்டுகள்?

இதற்க்கு எதற்கு 3 நீதி பதிகளை கொண்ட ஒரு பென்ச்?

பாசிஸ்டுகள்
 ஆதிகாலம் தொட்டே அதிகார வர்க்கமாக இருந்த பாசிஸ்டுகள் மக்களை பிரித்தாளும் கலையில் கை தேர்ந்தவர்கள் மக்களை பிரிதாளுவதர்க்காக அவர்கள் ஆரம்பித்து வைத்ததுதான் 400 ஆண்டுகாலம் முஸ்லிம்கள் தொழுகை நடாத்தி வந்த பள்ளி வாசலில் தான் இராமாயணம் என்னும் காவியத்தின் கதா நாயகன் இராமன் பிறாந்தான் என்னும் கற்பனையான  நாம்பிக்கை.பின் அந்த   அதிகாரவர்க்கதினார்  நாடு சுதந்திரம் அடைந்த பின் தங்களின் அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள அரசியல் வேடம் போட்டுக்கொண்டனர்.

அவர்களின் ஒரு பிரிவுதான் பி ஜே பி.  
1989.ஜூன்  மாதம் ஹிமாச்சல்பிரதேசத்தில்       நடந்த பி ஜே பி இன் National Executive  Counsel  மீட்டில் ஒரு தீர்மானம் கொண்டுவந்தது அதாவது   "இது நாம்பிக்கையின் அடிப்படையில் இருப்பதால் இது போல ஒரு விசயத்தில் முடிவு செய்ய நீதி மன்றங்களுக்கு ஆதிகாரம இல்லை, பாபர் வந்தாரா?
அயோத்தியை ஆக்கிராமித்தாராகோவிலை இடித்துவிட்டு பள்ளிவாசல் கட்டினாராஇது போன்ற விசயங்களில் தீர்ப்பு கொடுக்க நீதி மன்றத்திற்கு எந்த அதிகாரமும் கிடையாது என தீர்மானம் போடப்பட்டது 
இதான் பிறகு  என்ன சொன்னார்கள்  இது நம்பிக்கையின் அடிப்படையில் இருப்பதால் முஸ்லிம்களோடு பேசி  அந்த இடத்தை எங்களுக்கு பெற்று தரவேண்டும் இல்லையெனில் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றி அந்த இடத்தை எங்களுக்கு எடுத்து தரவேண்டும்
என்று அல்லவா பேசினார்கள் அந்த பாசிஸ்டுகள்.

அவர்களுடையா அதே தீர்மானத்தை  தானே இந்த தீர்ப்பும் பிரதிபலிக்கிறது


நாடு சுதந்திராம் அடைவதற்கு  முன்பு  1885 .இதே போலதான் மகிந்த ரகுபர் தாஸ் என்பவர் கோவில் கட்டப்போனார் ஆனால் அப்போதைய Deputy  Commissioner அவரை கோவில் கட்டவிடவில்லை பின் அவர் Secretaray   Of India    வை எதிர்த்து இதே போல் ஒரு Title sute வழக்கு  போட்டார் அப்போது அவராது வழக்கு தள்ளுபடி  செய்யப்பட்டது  நீதிபதிகள் Maintain Status role  என்று தான் தீர்ப்பு அளித்தார்.

அதோடு  1885 -இல் இருந்து 1949 .டிச-23 -ம் தேதிவரை  இந்த   பாசிஸ்டுகள் சும்மா தானே இருந்தார்கள்.

பின் 1949 டிச-23 -ம் இரவில் தானே  ராமன், சீதை விக்கிராகங்க்களை முஸ்லிம் களின் பள்ளிவாசலுக்கு வைதுவிட்டுப்போனார்கள்.

இந்த வரலாற்றைஎல்லாம் சட்டம் படித்த அதி மேதாவிகள் மறந்துவிட்டார்களா?


தொல்லியல் ஆய்வுகள்.

இந்த வழக்கைப்பொருத்தவரை  ARCHAEOLOGICAL SURVEY OF INDIA  (A S   I ) எனும் இந்திய தொல்லியல் கழகம் நடத்திய எல்லா ஆராய்ச்சி களிலுமே ராமர் கோவில் இருந்ததற்க்கான ஆதாரமோ அல்லது கோவிலை இடித்துவிட்டுதான்  மஸ்ஜித் கட்டப்பட்டது என்பதற்கான  ஆதாரமோ கிடைக்க பெறவில்லை.

மஸ்ஜித் இருந்த இடத்தில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வில்  சுண்ணாம்பு தூண்களும் வெட்டப்பட்டா மிருக எலும்புகலுமே கிடைத்தன. சுண்ணாம்பை உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தது முஸ்லிம்கள் தான்.

சுண்ணாம்பும், வெட்டப்பட்ட மிருக எலும்புகளும் பாப்ரி மஸ்ஜித் இருந்த இடத்தில் கண்டு எடுக்கப்பட்டிருப்பதன் மூலம்  இந்த இடத்தில் முஸ்லிம்கள் தான் வாழ்ந்தார்கள் என தெளிவாக உறுதி செய்தார்கள்  தொல்லியல் துறையினர்.

அத்தோடு   2003. தொல்லியல் கழக அறிக்கை அறுதியிட்டு இறுதியாக மசூதி இருந்த இடத்தில் தான் முன்னர் கோவில் இருந்தது என கூற முடியவில்லை

ஆய்வு முடிவுகளையும் சட்டத்தையும் விட்டு விட்டு நபிக்கையின் அடிப்படையில் சட்ட முடிவுகளை எடுக்க முடியுமா?

என சட்ட வல்லுனர்களெல்லாம் திகைத்து நிற்கிறார்கள். இந்த மா மேதைகளின் தீர்ப்பை கண்டு.


வழக்கு தள்ளுபடி ஆனால் பங்கு....?

தங்களுக்கு சொந்தமான 2 .77 ஏக்கர் தங்களிடம் ஒப்படைக்கசொல்லி தானே சுன்னி வக்பு வாரியம் வழக்கு தொடுத்தது வாழக்கை தள்ளுபடி செய்த நீதி பதிகள் பின்பு  எதற்கு மூன்றில் ஒரு பங்கு சுன்னி  வக்பு  வாரியத்திற்கு  என தீர்ப்பு சொல்லுகிறார்கள்.

இந்த தீர்ப்புத்தான் சட்டத்துறையில் இந்த நூற்றாண்டில்  நடந்த மாபெரும் தமாசாக இருக்கிறது.

இரவு பகலாக சிரமப்பட்டு இந்த தீர்ப்பை எழுதியதாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் நீதிபத்திகளுக்கு கடந்த கால வரலாறும், நிகழ கால வரலாறும் தெரியாமல் போனது ஏனோ?

அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு

எந்த ஒரு வரலாற்றுப்பார்வையும்  இன்றி, ஆதாரங்களின் அடிப்படை இன்றி, வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கியிருக்கும் இந்த கேவலமான தீர்ப்பை மத்தியில் உள்ள காங்கிரஸ் கட்சி வரேவேற்றுள்ளது.

நாம் தமிழ் நாட்டில் எல்லாவற்றிலும் எதிரும் புதிருமாக இருக்கும்    தி மு  வும், திராவிட முன்னேற்ற கழகமும்  கூட ஒரே அணியில் நின்று வாய் மூடி ஆதரவை தெரிவித்து  நமக்கு துரோகம் செய்வதை தமிழ் முஸ்லிம்கள் உணரவேண்டும்.

முஸ்லிம் சமூகம்  உணர்ந்து செய்யவேண்டியது  

பாப்ரி மஸ்ஜிதும் அது சார்ந்த இடமும்  வரலாற்று  பூர்வமாகவும் ஆதார பூர்வமாகவும் முஸ்லிம்களுடையது தான்  

முஸ்லிம்களோ
 அரசை நம்புகிறார்கள் ஆனால் ஆட்சியில் இருக்ககூடிய கட்சிகள் எல்லாமே முஸ்லிகளுக்கு துரோகம்  செய்கின்றன 

இந்த மகா பாதகமான  தீர்ப்பு முஸ்லிம் களுக்கு சொல்லி தருவது எல்லாம்  அராசு பதிவிகளில் முஸ்லிம்கள் அமர்ந்திட முயற்சிகள் செய்திட வேண்டும்

இப்படி ஒரு அநீதி நடக்கின்ற போது இந்த அநீதியை மக்கள் மன்றத்திற்கு எடுத்துசெல்லும் ஊடக துறையில் முஸ்லிம்கள் காலூன்றவேண்டும்

இது மாதரியான தவறுகளை நீதிமன்றம் செய்கின்ற போது  அதை அதே சட்டத்தின்  மூலம் தடுத்து நிறுத்தக்கூடிய சட்டம் இயற்றும் சபையான பாராளுமன்றத்தில் முஸ்லிம்கள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்திட வேண்டும்  இதற்க்கு பல்வேறு  காட்சிகளில் இருக்கக்கூடிய முஸ்லிம்கள் எல்லாம் ஒரே அரசியல் குடையின் கீழ் வரவேண்டும்  

தேசிய அளவில் முஸ்லிம்கள் ஒரே அரசியால் கட்சியின் கீழ் வரவேண்டும்.

முஸ்லிம்கள் எந்த அரசியல் அன்னக்காவடிகளையும் நம்பாமல் தங்களை  தாங்களே பலப்படுத்திக்கொண்டு இதுபோன்ற அநீதிகளை எதிர்த்துப்போராட முன் வரவேண்டும்

இல்லை எனில் எதிகாலத்தில் இது போன்ற அநீதிகள் மூலம் உங்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்திட காவி சக்திகள் பல முயற்சிகளை மேற்கொள்ளும் என்பதயும் இந்திய முஸ்லிம் சமூகம் உணரவேண்டும்.