Sunday, December 19, 2010

கஷ்மீர்: இந்தியா பாகிஸ்தான் இரண்டு நாடுகளாலும் கரைபடுதப்படும் தேசம்

நாடு பிடிக்கும் இரண்டு தேசங்களால் வஞ்சிக்கப்பட்டு நசுக்கப்படும் காஷ்மீர் மக்களில் அவலம் எப்போது நீங்குமோ..?

என ஏக்கத்தோடு நான் படித்த இந்த விடயங்களை அப்படியே நண்பர்கள் அனைவரோடும் பகிர்ந்துகொள்கிறேன்

ஜம்மு காஷ்மீரின் நிலப்பரப்பு 86 ,000௦௦௦(எண்பத்து ஆறு ஆயிராம் சதுர மைல்கள்.

மக்கள் தொகை கணக்கின்படி  காஷ்மீரில் ஏறாத்தாலே 10 மில்லியன் பேர் வசிக்கின்றார்கள்.

காஷ்மீரை மூன்று பிராந்தியங்களாக பிரிக்காலாம்.

1) காஷ்மீர் பள்ளத்தாக்கு

2) ஜம்மு பிராந்தியம் (கில்ஜிட்,லடாக், அடங்கிய வடக்குபிராந்தியம்)

3 ) இயற்கை எழில் கொண்ட காஷ்மீர் பள்ளதாக்கில் சரித்திரதொன்மை கொண்ட ஸ்ரீநகர் அமைந்துள்ளது இந்நகரின் மையப்பகுதி ஏனய இரு பிராந்தியங்களின் நடுவே அமைந்துள்ளது.

வராலற்றுப்பின்னணி

காஷ்மீரின் சோதனைக்காலம்,

1819 -ல் முஸ்லிம் ஆட்சி முடிவுற்று சீக்கியர்களின் ஆட்சி தொடங்கிய போதே
ஆரம்ம்பித்துவிட்டது.வெள்ளையரின் கிழக்கிந்திய கம்பெனியினர் போர்ப்பினையாக காஷ்மீரை,சீக்கியர்களின் இராணுவ தளபதியான குலாப் சிங்கிடம்மிருந்து 7 .5 மில்லியன் ரூபாய்க்கு (சுமார் 300 000 டாலர்கள்) அமிர்தசரஸ் ஒப்பந்தத்தின்படி 1846 -ல் வாங்கும்போது காஷ்மீரின் நாட்கள் இன்னும் இருண்டவைகளாக மாறிவிட்டன.

ஒப்பந்தம் என்ற மட்டும்மளவில் இல்லாமல் ,விற்பனை பத்திரம் என்றும் அமிர்தசரஸ் உடன்படிக்கை வரையறுக்கப்பட்டது.

இதன் காரணமாக நிராதரவான காஷ்மீரிகள் நிலம்,பயிர்கள்,ஓடைகள் மற்றும் இன்ன பிறவற்றுடன் சேர்த்தே விற்கப்பட்டனர்.(எவ்வளவு மலிவான விற்பனை இது? பவம் காஷ்மீரிகள்)
1846 ஐ அடுத்து நூறு வருடங்களாக காஷ்மீரிகள்,முக்கியமாக முஸ்லிம்கள் ஆயிரகானக்கில் கொல்லப்படுகின்றனர்.பெருந்துயரமாக அவரிகளின் மத உரிமைகள் மறுக்கப்பட்டு,அவர்கள் மீது கடுமையான வரிகள் (taxes ) சுமத்தப்பட்டன.

மகாராஜா ஹரிசிங் சொந்த குடிமக்கள் மீதே வன்முறையை கட்டவிழ்த்துவிட்டார்.
பின்னர் 1930 -ல் காஷ்மீர் குடிமக்கள் எதிர்க்க ஆராம்பித்துவிட்டனர்.இது ஒட்டுமொத்தமான மக்கள் எழுச்சியாகும்
அடக்குமுறை போருக்க முடியாமல் 1931 -ல் ஷேக்அப்துல்லாவின் (இன்றைய காஷ்மீர் முதல் அமைச்சர் உமர் அப்துல்லாவின் பாட்டனார்)தலைமையில் மக்கள் எழுந்தனர்.

அதே கால கட்டத்தில் இந்தியாவில் காந்தி தலைமையிலும் விடுதலைக்கான போராட்டங்கள் நாடைபெற்றுக்கொண்டு இருந்தன ஒரே வித்தியாசம் இங்கே வெள்ளையனே வெளியேறு என்கிற கோஷமும் அங்கே காஷ்மீரை விட்டு வெளியேறு கோஷமும் மேலோங்கி இருந்தது.

1947 -ல் இந்தியாவும் பாகிஸ்தானும் தனித்தனியாக பிரிந்து கஷ்மீரைப்பார்த்து, "நீ யாருடன் வருவாய்? "என்கிற ரீதியில் கேட்டானர்

 மகராஜா ஹரிசிங் அவர்களோ நான் யாருடனும் இல்லை என ஜகா வாங்கி காஷ்மீரை தொடர்ந்து தனி நாடாகவே நடத்தினார் திடீரென 1947 அக்டோபர் 22 -ல் பாகிஸ்தான் இராணுவத்தின் North West Frontier Province என்கிற ராணுவதுருப்பு பஷ்தூன் ஆப்கானி என்கிற பழங்குடியினருடன் சேர்ந்து காஷ்மீர் மீது படை எடுத்தது.

இந்த திடீர் படையெடுப்பை கண்டு அதிர்ச்சி அடைந்த மகராஜா உடனடியாக உதவிக்குவரவும் என அப்போதைய இந்தியா பிரதமர் நேருவுக்கு தகவல் அனுப்பினார்.
காஷ்மீர் வரலாற்றின் நெருக்கடிமிக்க நிகழ்வுகள்

25 .10 .1947
கடைசி ஹிந்து டோக்கர ஆட்சியாளரான மகாராஜா ஹரிசிங் ஸ்ரீநகரை விட்டு ஓடிவிடுகிறார்
26 .10.1947
ஓடிப்போகும் மன்னரிடம் இந்தியா பிரதிநிதி வி.பி.மேனன் ஜம்முவில் வைத்து 'இணைப்பு பத்திரம்' என்றழைக்கப்பட்ட தஸ்தாவேஜில் கைஎளுத்துப்பெருகிறார்.
27 .10 .1947
மகாராஜாவின் வேன்றுகோளை ஏற்று உடனடியாக இந்தியா ராணுவம் காஷ்மீருக்கு போக நேரு உத்தரவு இட்டார் அங்கே இரு படைகளுக்கும் உக்கிரகமாக போர் நடைப்பெற்றது பஞ்சாயத்துக்கு ஐ நா சபை வந்தாது இரு பாடியக்களும் போர் நிறுத்த ஒப்பந்தாம் செய்ததன
01 01 1948 .
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஐ நா வில் புகார் செய்தது
15 01 1948 .
பாகிஸ்தானும் பதில் கூறுகிறது 9 மதாங்கள் இது குறித்து நீண்ட விவாதங்கள் நடத்தப்படுகின்றன

13 .08 .1948 -15 .01 .1949

ஐ நா வின் பாதுகாப்பு கவுன்சில் பகைமைகளை முடிவுக்கு கொண்டு வருமாறும் அதன் பின் இனைப்புக்குறித்து

 சுதந்திரமான,நியாயமான,சுயநிர்ணயகருத்து கணிப்பு (plebiscite )நடத்தப்பெற்று அதனடிப்படியில் இணைப்புபற்றி முடிவெடுக்கவேண்டும் என இரு தீர்மானங்களை நிறைவேற்றியது. அதாவது "காஷ்மீர் யாருடன் ?"என்று முடிவுசெய்யும் அதிகாரத்தை காஷ்மீர் மக்களுக்கே ஐ நா வழங்கியது.

இந்த ஒப்பந்தத்தின் இறுதி வரியை கண்டுகொள்ளாத பாகிஸ்தான் தான் வசம் வந்த காஷ்மீரின் ஒரு பகுதியை தான் நிர்வாகத்தில் சேர்த்துக்கொண்டு அதற்க்கு "ஆஷாத் காஷ்மீர்' என்று பெயர் சூட்டியது


தனக்கு கிடைத்த பகுதியை இன்று வரையில் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டது இந்தியா அரசாங்கம்.

நடுவில் இருதலைக்கொள்ளியாக இன்று வரை தவித்துக்கொண்டு இருப்பவர்கள்தான் பரிதாபத்திற்குரிய அந்த கஷ்மீர் அப்பாவி மக்கள்.

நன்றி: விடியல் வெள்ளி மாத இதழ் 11 .09 .2010

6 comments:

அஸ்மா said...

தெரிந்துக் கொள்ளவேண்டிய விஷயங்கள்!

//நடுவில் இரு தாளை கொல்லி எறும்பாக இன்று வரை தவித்துக்கொண்டு இருப்பவர்கள்தான் பரிதாபத்திற்குரிய அந்த கஷ்மீர் அப்பாவி மக்கள்//

அவர்களுக்கு விரைவில் நிம்மதி கிடைக்க அல்லாஹ் உதவி செய்வானாக!

சே.ஆதம் பாவா said...

ஆமாம் சகோதரி பாவம் காஷ்மீர் மக்கள் அவர்களுக்காக நானும் துவா செய்கிறேன் நீங்களும் செய்யுங்கள்.

ரஹீம் கஸ்ஸாலி said...

உங்களின் கட்டுரைகள் நிறைய பேரை சென்றடைய தமிழ்மணம், தமிழ் ,இன்ட்லி போன்ற திரட்டிகளில் இணைத்திடுங்கள் நண்பரே....

வலையுகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
நல்ல அருமையான கட்டுரை
தொடருங்கள் இறைவனுக்காக

சே.ஆதம் பாவா said...

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லஹி வ பரக்கதுஹு நன்றி சகோதரர் ஹைதர் அலி

சே.ஆதம் பாவா said...

தங்கள் என் மேல்கொண்ட அன்பிற்கு நன்றி சகோதரர் ரஹீம் கஸாலி அவர்களே தங்கள் எனக்கு வழக்கிய தகவலும் பயனுள்ளதே.

Post a Comment